×

பிரபல இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் தற்கொலை: உடல் நலக்குறைவா, சொத்துப்பிரச்னையா என போலீசார் விசாரணை

சென்னை: பிரபல இசைக்குழு லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார். லஷ்மண் ஸ்ருதி இசைக்குழு உரிமையாளர் ராமன் (54). பல பின்னணி இசைப் பாடகர்களை மேடையில் ஏற்றி உலகம் முழுவதும் இசைக்கச்சேரி நடத்தி பெயர் பெற்றவர். தமிழ் பின்னணி பாடகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மற்ற மொழியை சேர்ந்த பின்னணி பாடகர் மற்றும் பாடகிகள் இதில் பாடி வருகின்றனர். இவரும் லஷ்மணனும் இரட்டையர்கள். இவர்கள் மூத்த சகோதரர் முருகவேலுடன் சேர்ந்து வடபழனி, 100 அடி சாலையில் லஷ்மண் ஸ்ருதி என்ற பெயரில் இசைக்கருவி விற்பனையகம் நடத்தி வந்தனர். கோடம்பாக்கம், டாக்டர் சுப்பராயன் நகர், 7 வது ெதருவில் தனது குடும்பத்துடன் ராமன் வசித்து வந்தார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், மனோஜ் என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம்தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் லஷ்மண் ஸ்ருதியின் சென்னை திருவையாறு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ராமன் தன்னுடைய இசைக் குழுவினருடன் பங்கேற்றிருந்தார். பின்னர் மாலை 6.30 மணியளவில் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும்போதே திடீரென தனியாக காரில் வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கிடையில் நிகழ்ச்சி முடிந்து அவருடைய மனைவி நிர்மலா, ராமனின் தாயார் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ராமனின் மனைவி தனது கார் டிரைவர் வினோத்தை அழைத்து வீட்டின் கதவை உடைக்க சொல்லி உள்ளே சென்று பார்த்தபோது, ராமன் வீட்டின் பெரிய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே கார் டிரைவர் உதவியுடன் ராமனை தூக்கு கயிற்றில் இருந்த கீழே இறக்கி, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர அவசரமாக அனுமதித்தனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், ராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

 இதுகுறித்து ராமனின் மகன் மனோஜ் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார், ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரர் பன்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ராமன் மூலநோயால் அவதிப்பட்டு வந்தது தெரிந்தது. சில நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோவும் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.அதே நேரம், ராமன் குடும்பத்துக்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதால், அதை பிரிப்பதில் சகோதரர்களுக்கு இடையே மனக்கசப்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ராமன் தற்கொலை முடிவு எடுத்தரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமனின் செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று காலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

 பிரபல பின்னணி பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியன், உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன் உள்ளிட்ட பாடகர்கள், பாடகிகள் மற்றும் இசையமைப்பாளர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலின் இரங்கல்: ‘லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு உரிமையாளர் ராமன் எதிர்பாராத மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ கழக நிகழ்ச்சிகளுக்கு துணைபுரிந்த ராமன் மறைவு திமுக போன்ற அரசியல் பேரியக்கங்களுக்கும் இழப்பாகும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Tags : owner ,Lashman Sruthi ,band ,suicide , The owner of the popular band, Lashman Sruthi, is ill-health, property problem
× RELATED ஊட்டி மலர் கண்காட்சி துவக்க...